ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி தொடங்கி முதலே ஐத்ரபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூதாட்டம் தொடங்கி விட்டது. குறிப்பாக, பத்திராபாத்தில் அதிகளவில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சைபர் கிரைம் போலீசாருக்கு, ஐபிஎல் சூதாட்டத்திற்கு என்றே பிரத்யேகமான மொபைல் செயலி தயாரித்த கும்பல், பல கோடி அளவிற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த பணத்தையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில்2020 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இதுவரை 730 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சூதாட்ட கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சந்தூர் சுஷாந்த் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூதாட்டத்திற்காக அவர்கள் வைத்திருந்த பணம் 22 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாயும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வங்கி கணக்கில் இருந்து 13 லட்சம் ரூபாயை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். சூதாட்டம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சூதாட்ட கும்பலை சேர்ந்த மேலும் 8 பேர் தலைமறைவு ஆகிவிட்டனர். தலைமறைவான கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய 2வது வீரர்… ரசிகர்கள் ஏமாற்றம்