இந்தோனேசியாவில் 18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. இதில் சீனா 51 தங்கம் உள்ளிட்ட 101 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

துப்பாக்குச் சுடுதல் விளையாட்டில் இளம் இந்திய வீரர்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இதே ஆசியப் போட்டியில் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 16 வயதே ஆன இளம் வீரர் செளரப் செளத்ரி போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார்.

அதற்கு முன்பு, டிராப் போட்டியில் இந்தியாவின் 19 வயது வீரர் லக்‌ஷய் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் 15 வயது ஷர்துல் வெள்ளி வென்றுள்ளார். இதேபோல ஏப்ரல் மாதம் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை செய்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் டபுள் டிராப் இறுதிச்சுற்றில் இந்தியாவின் 15 வயது வீரர் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.

இதையடுத்து ஆசியப் போட்டியில் இந்தியா தனது 17-வது பதக்கத்தைப் பெற்றுள்ளது. இதுவரை இந்திய அணி 4 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 17 பதக்கங்களுடன் 9-ம் இடத்தில் உள்ளது.