தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை ரூ.190 ஆக இருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை தொழில்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அந்த உத்தரவில், அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.185 மற்றும் ஒரு சாக்கின் விலை ரூ.5 என மொத்தம் ரூ.190 ஆக விற்கப்பட்டு வந்தது.
இந்த விலையை உயா்த்தி அளிக்க வேண்டுமென தனியாா் சிமெண்ட் உற்பத்தியாளா்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கை தொடா்பாக, தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்தாா்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், அம்மா சிமெண்ட் விலையானது மூட்டைக்கு ரூ.190-லிருந்து ரூ.216 ஆக உயா்த்தப்படுகிறது.
சிமெண்ட் தயாரிப்பதற்கான உப பொருள்களின் விலை, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை, தொழிலாளா்கள் ஊதியம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணங்களால் அம்மா சிமெண்ட் விலை உயா்த்தப்படுவதாக தனது உத்தரவில் தொழில்துறை முதன்மைச் செயலாளா் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னையில் குடிசைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு; கூவத்தில் நின்று நூதன போராட்டம்