வாசு கைதான பின்னரும் குறித்த தகவல்களைத் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். வாசுவுக்கு பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். அவர் கைதான தகவல் சக போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அவரா அப்படிச் செய்தார். நம்ப முடியவில்லை’ என்பதுதான் பெரும்பாலான போலீஸாரின் பதிலாக இருக்கிறது.
 
வாசு குறித்து துருவி விசாரித்தபோது, தமிழகக் காவல்துறையில் காவலராகச் சேர்ந்த அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். அவரின் எல்லா பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டன.
 
கையும் களவுமாக பிடிப்பட்டும்  அவர் மீது வில்லிவாக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது குறித்த தகவல் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
உடனே அவர், தவறு செய்தது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு வாசு குறித்து விசாரணை நடத்தி உடனே ரிப்போர்ட் கொடுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்பிறகு வாசு மீது குற்றம் சுமத்திய சிறுமி, அவரின் அம்மா மற்றும் பொதுமக்களிடம் இரண்டாம் முறை மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த 10 வயது  சிறுமி, `அந்த அங்கிளை (வாசு) எனக்குத் தெரியும். நாங்கள் குடியிருக்கும் பகுதியில்தான் அவர் குடியிருந்தார். அன்பாகத்தான் என்னிடம் பழகினார். அதன்பிறகு அவரின் ஒவ்வொரு செயல்களும் பேச்சும் அநாகரிகமாக இருந்தது. எனக்கு அப்பா இல்லை. அதனால் அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்துவந்தார்.
அங்கிள் குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். அங்கிள் போலீஸ் என்பதால் அமைதியாக இருந்தேன். சம்பவத்தன்று என்னுடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்துவிட்டனர்.
 
 
அப்போது அங்கிளும் அங்கு இருந்து பைக்கில் சென்றுவிட்டார்’ என்று முழுவிவரத்தையும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்ட அந்த ஐ.பி.எஸ். அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.
 
உடனடியாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீஸார், வாசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
அதன்பிறகே சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாகினர். வாசுவை கைது செய்த போலீஸார் ரகசியமாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
 
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவானபிறகும் சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் குறைந்தபாடில்லை. பாதிக்கப்படும் பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி உண்மைகளை மறைத்துவிடுகின்றனர்.
 
இதனால் தவறுசெய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவதோடு மீண்டும் அதே தவற்றை செய்துவருவதாக சமூகஆர்வலர்கள் சொல்கின்றனர்.
 
பிடிப்பட்டது ஒரு வாசு .. தப்பித்து செயல் படும் வாசுக்கள் எத்தனை எத்தனை .. தனிப்பட்ட நபர்கள் திருந்தா விட்டால் சட்டம் திருத்த முடியுமா ..