சென்னை சத்தியவாணி முத்துநகரில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 10 பேருக்கு மேல் கூவம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்து நகர் குடிசைவாழ் மக்களை, வெளியேற்றுவதை எதிர்த்து அம்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தாண்டு டிசம்பர் மாதமே, அப்பகுதி மக்கள் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இப்பகுதியில் வாழ்ந்த 70% மக்கள், தங்கள் இருப்பிடத்தை காலிசெய்துவிட்டு, சென்னையின் முக்கியப் பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள பெரும்பாக்கத்திற்கு சென்றுவிட்டதாகவும், தற்போது 30% பேர்தான் அங்கேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதிக்கு காவல்துறையினருடன் நுழைந்த அதிகாரிகள், அப்பகுதி மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். பல வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தனர்.

[su_image_carousel source=”media: 19970,19971″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

ஆனால், அப்பகுதி மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 10க்கும் மேற்பட்டோர், அருகிலிருந்த கூவம் நதியில் இறங்கி, கழுத்தளவு நீரில் நின்றுகொண்டனர். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து அகன்றபிறகே அவர்கள் வெளியே வந்தனர்.

தாங்கள் இப்பகுதியிலிருந்து தொலைதூரத்திற்கு வெளியேற்றப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவை பாதிக்கப்படும் என அம்மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசின் இந்த அப்புறப்படுத்தல் நடவடிக்கைக்கு, கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் ப.ரஞ்சித், “சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் அவர்கள். விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு #நமக்கு_எதிரான_அரசு” எனத் தெரிவித்து உள்ளார்.

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர், பழனிசாமியை நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு