மதுரை தோப்பூரில் 1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது.
 
இதை முன்னிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு மதுரை வந்தார் பிரதமர் நரேந்திரமோடி. அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், வைகோ மற்றும் மதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது, இயற்கை எங்களை வஞ்சித்த போது ஒப்புக்காக கூட பிரதமர் மோடி வந்து பார்வையிட்டு இருக்கலாம். தமிழகத்தின் இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
 
பிரதமர் மோடி மதுரையை விட்டு கிளம்பும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும். நரேந்திர மோடி ஆட்சி உதயமாகும் போதும் நாங்கள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினோம். அந்த ஆட்சி அஸ்தமனமாகப்போகும் போதும் நாங்கள் கறுப்பு கொடி காட்டுகிறோம் என்று வைகோ குற்றம்சாட்டினார்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட 650-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அதுபோன்று மதுரை பெரியார் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி, முகிலன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
மதுரைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை நினைவு பரிசாக தமிழக முதலமைச்சர் முதல்வர் பழனிசாமி வழங்கினார். விழாவில் துணை முதலவர் ஓ.பன்னீர் செலவம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையம் (எய்ம்ஸ்) மருத்துவமனை மதுரை தோப்பூரில் ரூ.1.264 கோடி மதிப்பீட்டில் 201.75 ஏக்கர் பரப்பில் மத்திய அரசு அமைக்கிறது. இதனை 4 ஆண்டுகளில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 750 படுக்கை வசதி, 16 அறுவை சிகிச்சை கூடம், ஒரு குழுவுக்கு 100 மாணவர்களுடன் மருத்துவக்கல்லூரி, ஒரு குழுவுக்கு 60 மாணவர்களுடன் செவிலியர் கல்லூரி இடம் பெறுகிறது. 18 மருத்துவ நிபுணர்கள், சிறப்பு நிபுணர்கள் இடம் பெறுகின்றனர் என தெரிவிக்கப்படுள்ளது . இந்த நிலையில் உலக அளவில் தமிழர்கள் டிவிட்டரில் பதிவு செய்ய உலக அளவில் 1ஆம் இடத்தில் மோடியே திருப்பி போ #Gobackmodi ஹாஷ்டாக் வ்ந்ததால் பாஜகவினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து உள்ளனர்