விஞ்ஞானி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான மாரீஸ் விஜய், மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019-ல் சிறந்த சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மாரீஸ் விஜய் ‘விஞ்ஞானி’ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். சமீபத்தில் அதிக பொருட்செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்கி இருக்கிறார்.

மாரீஸ் விஜய் இசையில், “வில்லவன்” எனும் மலேசிய தமிழ் படம் உருவானது. அதிக பொருட்செலவில் உருவான இந்த படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இசை ரசிகர்களின் பாராட்டு பெற்றது. இப்படத்தின் மூலம், இவரது இசைக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019-ல் சிறந்த சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றிருக்கிறார்.

இந்த விருது விழா ஜனவரி 31-ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.