ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக, அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பிரதமர் ஷின்சோ அபே (வயது 65) குடல் வீக்கம் மற்றும் அல்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை ஷின்சோவுக்கு உண்டு. இவரது உறவினர் இசாகு சாட்டோ 1964 முதல் 1972 வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவரையும் ஷின்சோ பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007ம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால், அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 2021 அக்டோபரில் நடைபெறும். இந்நிலையில் ஷின்சோ அபே ராஜினாமா செய்ததும், அடுத்ததாக உள்துறை அமைச்சராக இருப்பவர் அந்த நாட்டின் எஞ்சி இருக்கும் ஆட்சிக் காலத்தை நடத்தலாம் என்று அந்த நாட்டின் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தற்போது தக்கவைத்து இருப்பதற்கு முக்கியக் காரணம் ஷின்சோ அபே. அவரது இடத்தை மற்றொரு பிரதமர் வந்து நிரப்புவது மிகக்கடினம் என ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஃபேஸ்புக் விளம்பரதாரர்களின் பட்டியலில் மோடி அரசு முதலிடம்… அதிர்ச்சி ரிப்போர்ட்