நேற்றைய தீர்ப்பில் நீதிமன்றங்களில் நீதியரசர்கள் எழுப்பிய கேள்விகள் மிக முக்கியமானவை: எதன் அடிப்படையில் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வன்னியர்களுக்கு செய்யப்பட்டது.

எதன் அடிப்படையில் ஏழு ஜாதிகள் என சொல்லப்பட்டாலும் அவைகள் வன்னியர்களை மட்டுமே குறிக்கும் ஜாதிக்கு 10.5% கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 135 ஜாதிகள் எதன் அடிப்படையில் விடப்பட்டுள்ளன.

நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விடை.. ஜாதி வாரியாக கணக்கெடுப்பு மட்டுமே கொடுக்கும் என்பதனை மறுத்துவிட்டு செயலாற்றுவது அரிசி மாவு இல்லாமல் அரிசி முறுக்கு சுடுவது போல..

தமிழகத்தில் வன்னியர்கள் தான் அதிகம் என்று சொல்பவர்கள், ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் எழுப்ப மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்.

அப்படி எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் வாயிலாக வன்னியர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றால் அது அவர்களுக்கும் நல்லது தானே.

சமீபத்தில் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதிகள் கூட்டமைப்புகள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய போராட்டத்தில்,

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை, இது எங்கள் பிரச்சினை வன்னியர் ஒதுக்கீட்டுக்கு சட்டமன்றத்தில் ஆதரவு தந்த நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று சொல்லி மேடையை விட்டு அவரை இறக்கி விட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

திமுக அரசு தகுந்த ஹோம் வொர்க் பண்ணாமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது அதற்கு தோல்வியை மீண்டும் தரக்கூடும்.

தேர்தல் கூட்டணிக்காக அது தரும் வெற்றிக்காக பாஜகவும் அதிமுகவும் பாமகவும் இணைந்து அவசரகதியில் அள்ளித் தெளித்த சட்டம் தான் 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் என்பதை மதுரை கிளை உயர்நீதிமன்றம் சாட்டையடியாக தந்துள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

பத்து வருடமாக இரட்டை ஆயுள் தண்டனையும் கடந்துவிட்ட எழுவர் விடுதலைக்காக ஆளுநர்கள் பல சட்டமன்ற தீர்மானங்களை வாங்கிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும்போது,

2021 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் சில நேரங்களுக்கு முன்னரே ஒரு மணி நேரத்தில் அனுமதி தந்து அரசு கெஜட்டில் ஏற்றியது.

உயர்நீதிமன்றத்தின் கண்களை எப்படி உறுத்தாமல் போகும் என அன்றே அதிமுகவில் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவினை தந்த பாஜகவினரும்..

முக்கியமாக 40 ஆண்டு வருட சாதனை என்று தங்களையே புகழ்ந்து பாராட்டிய பாமகவினரும் மறந்துபோனது விந்தையே..

முஸ்லிம்களுக்கு அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு இல்லையா என்று கேள்வி எழுப்புபவர்கள்..
அதற்கு நேற்று நீதிமன்றம் தந்த பதிலை தங்களுக்கு சாதகமாக பார்க்க மறுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் அருந்ததியர்கள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்டு அவர்கள் விவரம் முறையாக அரசால் தரப்படுகிறது.

ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் கணக்கெடுப்பு என்பது கடந்த 74 ஆண்டாகியும் ஒருமுறைகூட சுதந்திர இந்தியாவில் நடத்தப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

இத்தனைக்கும் இந்திய ஜனத்தொகையில் சுமார் 55 சதவீதம் அதாவது 75 கோடி மக்கள் இந்து மதத்தில் சொல்லப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களே வாழ்கிறார்கள்.

பிரதமராக இருந்தபோது விபி சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கொண்டுவந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மெரிட் போய்விட்டது என்று புலம்பித் தள்ளி போராட்டத்தில் குதித்து ஆர்ப்பாட்டம் நடத்திய வட இந்திய உயர் ஜாதி மக்கள்.

10% உயர் ஜாதி மக்களுக்கு அதுவும் எந்தவொரு தரவுகளின் அடிப்படையில்லாத காரணிகளை கொண்டு வேகவேகமாக தங்களுக்கு உயர் ஜாதியில் ஒதுக்கீடு கிடைத்தபோது வாய்மூடி அமைதியாக அதை ஏற்றுக்கொண்ட அதிசயமும் இந்தியாவில் தான் நிகழ்ந்தது.

இப்படியாக தீவிரமாக உயர் ஜாதி மக்களின் 10% EWS ஒதுக்கீட்டை உருவாக்கிய மோடி தலைமையிலான ஒன்றிய அரசு., இந்துக்களின் காவலர்கள் நாங்கள் என மார்தட்டிக்கொள்ளும் பாஜகவினர் இந்துக்களின் 75 கோடி மக்களை கண்டுகொள்ளாமல் விடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும்..

கிழக்கில் மேற்கில் வடக்கு தெற்கில் எப்படி அமர்ந்து எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. இதன் காரணமாக தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் உயர்ஜாதி மக்களின் இட ஒதுக்கீடு வழக்கில் ஒன்றிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது பதில் அறியாமல்..

வன்னியர்களை அதிகாரம் படுத்தும் சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு ஏதுவாக.. உச்சநீதிமன்றம் சென்றாலும் அதிமுக அரசு அவசரகதியில் உண்டாக்கிய உள் ஒதுக்கீடு சட்டத்தை தற்போது #திமுக அரசாலும் காப்பாற்ற முடியாது.

பின்னர் எப்படித்தான் இதை சாத்தியப்படுத்துவது.. தீர்வு உள்ளது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம்.. இதை திமுக அரசிடம் கோராமல் அல்லது இதனை நோக்கி செல்லாமல் பாமக அதிமுகவினர் பாஜகவினர் திமுகவை blame game மட்டுமே ஆடுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை..

நீட்டுக்கு கமிட்டி அமைத்து அதை முறையாக நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற திமுக தமிழ்நாடு அரசு.. சாதி வாரி கணக்கெடுப்பை முன்னெடுத்து கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வை அளிக்க முடியும்.

இல்லாவிட்டால் தொடர்ந்து தீர்வு தராத விரும்பாத நீதிமன்றங்களை வைத்துக்கொண்டு இருக்க விரும்பும் காவிரி பிரச்சனை போல..

சுத்த படுத்தவே முடியாத நிர்வாகத்திறமை வைத்துக்கொண்டு கங்கையை சுத்தப்படுத்துவோம் என்ற வெற்று கோஷம் போல.. பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்களின் உள் ஒதுக்கீடும் கானல் நீராகிவிடும் காட்சிப்பிழையாகி ஆகிவிடும்..

https://www.facebook.com/savenra/posts/7283406311685229