உள்ளாட்சி தேர்தல் பதவிகள் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் கடலூர் திமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அய்யப்பன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் தடாலடியாக நீக்கப்பட்டுள்ளார்களே..

திமுகவில் உள்ளவர்கள் மட்டும் கூட்டணி தர்மத்தை மீறவில்லை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கூட்டணி தர்மத்தை மீறி இருக்கின்றன..

இதை கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இருவருக்கும் இரு வாரம் ஷோ காஸ் நோட்டிஸ் கொடுத்து பின்னர் அவர்கள் பதிலைக் கேட்ட பின் நடவடிக்கையை செய்திருக்கலாம்.. அல்லது சென்னைக்கு அழைத்துப் பேசி ஆலோசனை கொடுத்திருக்கலாம்..

மாறாக சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வ கருத்தைக் கேட்காமல் செல்வி ஜெயலலிதா ஸ்டைலில் கட்சியை திமுக கொண்டு செல்வது நல்லதல்லவே..

ஜெயலலிதாவின் ஆட்டோகிரட்டிக் எடுத்தேன் கவிழ்த்தேன் நிர்வாக தன்மைதான் இன்றைய அதிமுகவின் அனைத்து குளறுபடிகளுக்கு காரணம் என்பதனை அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது தானே..

இதனை திமுக தலைமை மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு பொறுமையுடன் செயல்படுவதே பொருத்தமானதாக இருக்க முடியும்..

அதிகாரக் குவியலை சேர்க்க ஆசைப்படும் ஒன்றிய அரசை எதிர்த்து மாநில சுயாட்சிக்காக திமுக குரல் கொண்டிருக்கும்போது, மாவட்ட நிர்வாகிகள் குரல் மாவட்ட ரீதியாக எழுப்பப்படும்போது அதனை கவனத்துடன் அணுகுவது தானே சால சிறந்தது..

அண்ணா சொல்லிக் கொடுத்த கண்ணியம் கடமை கட்டுப்பாடு அண்ணா ஆரம்பித்த கட்சி தொண்டர்களுக்கு மட்டுமல்ல.. அதன் தலைவர்களுக்கும் பொருந்தும் தானே என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்துள்ளது திமுக..

https://www.facebook.com/savenra/posts/8056796954346157