கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழை சில வினாடிகளில் வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா 3வது அலையை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 50.68 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 55.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்க்கை கிளிக் செய்தபின் அதற்குள் சென்று சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது. டிஜி லாக்கர், கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து, சான்றிதழை பெற வேண்டியிருந்தது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய மக்கள் உடனடியாக சான்றிதழைப் பெறும் வகையில் வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெறும் வசதியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சாமானிய மக்கள் வாழ்க்கையில் அதிகமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும், எளிதான 3 வழிகள் மூலம் பெறலாம்.
+91 9013151515 என்ற எண்ணை செல்போனில் சேமித்துக் கொண்டு, இந்த எண்ணுக்கு கோவிட் சர்டிபிகேட் (covid certificate) என்று டைப் செய்து வாட்ஸ்அப் அனுப்ப வேண்டும். அதன்பின் உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை பதிவு செய்தால் சான்றிதழ் கிடைத்துவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதி; ஒரு டோஸ் போதும்!