இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 329 ரன்கள் குவித்து, 2-1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா- ஷுப்மான் கில் ஜோடி ரன்கள் சேர்த்தது.
62 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவைபட்டது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.
அடுத்து வந்த ரஹானே 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
[su_image_carousel source=”media: 21574,21575″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவைபட்ட நிலையில், ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார். இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து 7வது ஓவரில் 15 ரன்கள், 6வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
இறுதியாக இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார்.
3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை