பேரவைத் தலைவருக்கு இணையாக ஆளுநரின் செயலாளருக்கு இருக்கை போடப்பட்டதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பேரவைத் தலைவருக்கு இணையாக ஆளுநரின் செயலாளருக்கு இருக்கை போடப்பட்டதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய துரைமுருகன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அவையில் உட்கார அதிகாரம் படைத்தவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமைச் செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட இருக்கிறது.
அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த நீதிமன்றமும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது. இப்படிப்பட்ட நிலையில், அவைக்கு ஆளுநர் வந்த போது அவருடைய செயலாளர் ராஜ கோபாலுக்கு பேரவைத் தலைவ ருக்கு இணையாக தனி இருக்கை போட்டது முறையா? (ஆதாரத்திற்கு புகைப்படத்தை யும் காண்பித்தார்) என்றும் தலை மைச் செயலாளர் கூட உட்கார முடியாது என்ற நிலையில் ஆளுநரின் செயலாளர் எப்படி உட்கார்ந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
பேரவைத் தலைவரை எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்கவோ தண்டனை வழங்கவோ முடியாது என்றும், பேரவைத்தலைவர், உறுப்பினர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தெரிவித்த துரைமுருகன் மன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்” என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த பேரவைத்தலைவர் ப. தனபால், “என்மீது வைத்துள்ள மரியாதைக்கும் எனக்குள்ள அதிகாரம் குறித்தும் தெரிவித்த எதிர்க்கட்சித் துணைத்தலைவருக்கு நன்றி.
ஆளுநர் பேரவைக்கு வரும் போது அவருடன் உதவியாளர்கள் வருவது மரபாக இருந்துள்ளது. அவரது உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ அப்படி இனி கையாளுவோம்” என்று கூறி திமுக வின் துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தார் சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய துரைமுருகன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அவையில் உட்கார அதிகாரம் படைத்தவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமைச் செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட இருக்கிறது.
அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த நீதிமன்றமும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது. இப்படிப்பட்ட நிலையில், அவைக்கு ஆளுநர் வந்த போது அவருடைய செயலாளர் ராஜ கோபாலுக்கு பேரவைத் தலைவ ருக்கு இணையாக தனி இருக்கை போட்டது முறையா (ஆதாரத்திற்கு புகைப்படத்தை யும் காண்பித்தார்) என்றும் தலைமைச் செயலாளர் கூட உட்கார முடியாது என்ற நிலையில் ஆளுநரின் செயலாளர் எப்படி உட்கார்ந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
பேரவைத் தலைவரை எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்கவோ தண்டனை வழங்கவோ முடியாது என்றும், பேரவைத்தலைவர், உறுப்பினர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தெரிவித்த துரைமுருகன் மன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்” என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த பேரவைத்தலைவர் ப. தனபால், “என்மீது வைத்துள்ள மரியாதைக்கும் எனக்குள்ள அதிகாரம் குறித்தும் தெரிவித்த எதிர்க்கட்சித் துணைத்தலைவருக்கு நன்றி.
ஆளுநர் பேரவைக்கு வரும் போது அவருடன் உதவியாளர்கள் வருவது மரபாக இருந்துள்ளது. அவரது உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ அப்படி இனி கையாளுவோம்” என்று கூறி திமுக வின் துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தார்