மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் மாநிலங்களவையில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் விவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி மேற்கொள்ளும் வெளிநாடு பயணங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களில் தொடங்கி எதிர் கட்சி தலைவர்கள் வரை வெளிநாட்டு பயணங்களை விமர்சிக்கின்றனர்.
 
இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினாய் விஸ்வம், மோடி பிரதமராக பதவியேற்று இதுவரை எத்தனை நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளார்,
 
அவருடன் எத்தனை எம்பிகள் சென்றுள்ளனர், எத்தனை ஒப்புதல்களில் கையெழுத்திட்டுள்ளார், அவரின் பயணத்திற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளனர் என்று மாநிலங்களவையில் எம்பி விகே சிங்கிடம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த விகே சிங், மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்காக மற்றும்    விளம்பரங்களுக்கு ஆன செலவு 8650 கோடிகள்  என்றும் .,
 
அதில் ஏர் இந்தியா விமான சேவை மற்றும் அவருடைய பாதுகாப்பிற்காக செலவிடப்பட்டதும் அடங்கும் , என்றும் அவையே தனியாக பட்டியல் இட்டால்: 
 
விளம்பரங்களுக்கு ஆன செலவு 4611 கோடியும்,
வெளிநாட்டு பயண செலவு 2017  கோடியும் ,
விமான பராமரிப்பிற்காக ரூபாய் 1,583.18 கோடியும்,
தனி விமானத்திற்காக ரூபாய் 429.28 கோடியும்,
பாதுகாப்பிற்காக ரூபாய் 9.12 கோடியும் இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் .
 
மேலும் மே மாதம் 2017 முதல் தற்போதுவரை மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு செலவுகள் இதில் சேர்க்க்ப்படவிலை என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் வெளியான விவரத்தில், மே மாதம் 2014ல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை 42 வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதில் ஜூன் 15ஆம் தேதி 2014 முதல் ஜூன்10 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு வரையிலான செலவுகளை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அந்த சுற்றுப்பயணத்தில் 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015-2016 ஆம் காலகட்டத்தில்தான் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
 
இதனையடுத்து 2017-2018 ஆம் காலகட்டத்தில் 19 நாடுகளுக்கும்,
 
2016-2017 காலகட்டத்தில் 18 நாடுகளுக்கும்,
 
2014-2015 காலகட்டத்தில் மிகவும் சொற்பமாக 13 நாடுகளுக்கு சென்றுள்ளார்.