லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர்.
 
இந்த நடைமுறையின் முதல் நடவடிக்கையாக, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு அழைப்பு அனுப்பியிருந்தது.
 
இந்த 3 பேர் கொண்ட தேர்வுக்குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும்.
 
இந்த தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
 
ஆனால் ஊழல் புகார் உள்ள முதலமைச்சர் தனக்கு வசதியாக, உச்ச நீதிமன்றம் வரையறுத்த அடிப்படையை தகர்த்து அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதில் உடன்பாடு இல்லாததால், #Lokayukta தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க இயலாது என கடிதம் எழுதி இதில் பங்கேற்க முடியாது என மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
 
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் இல்லமால் நடைமுறையை மீறி முதல் நடவடிக்கையாக, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
 
 
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
 
இந்த நியமனம் சட்ட மீறல் குறித்து நீதிமன்றத்துக்கு செல்லுமே என்றால் நியமிக்கபட்டவர்களின் நிலைமை கேள்விகுறியாகும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்