தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரே நேரத்தில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதால், போதிய வசூல் கிடைப்பதில்லை. இதனை ஒழுங்குபடுத்த வாரத்திற்கு 4 படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமுறை உருவாக்கப்பட்டது.

ஆனால் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் 10 படங்கள் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் தயாரிப்பாளர் Guild படத்தை பதிவு செய்திருந்தால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாதத்தின் இறுதி வாரத்தில் 7 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, அதர்வா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’

அரவிந்த்சாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘60 வயது மாநிறம்’

பா.விஜய் தயாரித்து நடித்துள்ள ‘ஆருத்ரா’

தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் ‘ஆண் தேவதை’

தினேஷ் நடித்துள்ள ‘அண்ணனுக்கு ஜே’

குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியாகும் ‘வஞ்சகர் உலகம்’

இவை அனைத்து நடுத்தர பட்ஜெட் கொண்ட படங்கள். ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் 200 தியேட்டர்களாவது வேண்டும்.

இதன் காரணமாக கடைசி நேரத்தில் சில படங்கள் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம், கில்டு, சேம்பர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பட வெளியீட்டை முறைப்படுத்தினால் மட்டுமே ஓரளவு நல்ல வசூலை ஈட்ட முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.