நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் க/பெ.ரணசிங்கம். இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஜீ5 ஓடிடி தலத்தில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை.

தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு மணி நேர வெப் திரைப்படமாக உருவாகி உள்ளது ‘முகிழ்’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ரெஜினா மற்றும் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

முகிழ் படத்தை கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பெண் இசையமைப்பாளர் ரிவா இசை, சத்யா பொன்மர் ஒளிப்பதிவு, கோவிந்த ராஜ் படத்தொகுப்பு, ரேவா இசையமைப்பு போன்ற பணிகளை செய்துள்ளனர்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=-7_WfWpxIhA&feature=youtu.be” width=”700″ autoplay=”yes” title=”விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர்”]

புத்தாண்டை முன்னிட்டு முகிழ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஒரு மணி நேர வெப் திரைப்படமாக வெளிவரவுள்ள முகிழ் படத்தின் ட்ரைலர் மிகவும் எதர்த்தமாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. மென்மையான கதைகளத்தை கொண்ட இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் முகிழ் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சிந்துபாத் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் டிரைலர் வெளியீடு