மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மாறா’ படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 29) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் சார்லி. இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பப்படமாக உள்ளது. மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘மாறா’ படம்.

அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது மாறா திரைப்படம்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இப்படம் ஜனவரி 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஹிட்டான படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அதில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத். முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அழகான இடங்களில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் திலீப்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=Lv5KUKKwQEw&feature=emb_logo” width=”700″ autoplay=”yes” title=”மாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் டிரைலர் “]

தியேட்டரில் பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகிறது. அதேநேரத்தில் ஒடிடி தளத்தில் மாதவனின் மாறா மற்றும் ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையில் தியேட்டரிலும் ஒடிடியிலும் கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு