சென்னை புழல் அருகே உள்ள தனலட்சுமி நகரை வாக்காளர் பட்டியலில் காணவில்லை என்று தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
தனலட்சுமி நகரை சேர்ந்த 80 குடும்பங்கள் அதே ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் பல வருடங்களாக வாக்களித்து வந்துள்ளனர்.
 
ஆனால் தற்போது வந்துள்ள வாக்காளர் பட்டியலில் நாங்கள் வசிக்கும் தனலட்சுமி நகரை காணவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
காணாமல் போன தங்களது நகரை கண்டுபிடித்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என்று தலைமை செயலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
தனலட்சுமி நகரில் உள்ள வாக்காளர்களின் பெயர் புழல் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
அதனால் வழக்கம் போல் நாங்கள் நகருக்கு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.