எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தாக கூறி உள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டது .
 
அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமான படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து தாக்குதல் நடத்தின என்றும் .,
 
அதில் சுமார் 1000 கிலோ வெடிபொருட்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன என்றும் . இதில் பாலகோட்டில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருந்த ஒரு தீவிரவாதிகள் முகாமை 6 முறை குண்டுவீசி தகர்க்கப்பட்டதாக என்றும்.,
இதில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது என இந்திய அரசின் செய்தி குறிப்பு கூறுகிறது
 
ஆனால் இதனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மறுத்து ட்விட் செய்து உள்ளார் .
 
விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட் என்ற பகுதியில் நடத்தப்பட்டது இந்திய அரசின் தகவல்கள் தெர்விக்கின்றன
 
ஆனால் மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார்.
 
இந்த தாக்குதலில் ஏராளமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், மூத்த கமாண்டோக்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசின் தகவல்கள் டர்ஹெரிவிக்கின்றன.
 
1971-க்கு பின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். ஆனால் இதனை மறுத்து உள்ள பாகிஸ்தான் ரானுவம்   இந்திய எல்லை தாண்டிய விமானங்கள் திருப்பி அனுப்பட்டதாக கூறி உள்ளது ..