லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமித்து கிடங்கில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகளால் லெபனான் அரசு அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.

உலகை உலுக்கிய பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனப் பொருள் தீப்பற்றி நடந்த பயங்கர வெடிவிபத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 6,000க்கும் அதிமமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது லெபனான் நாட்டில் ஹாசன் தியாப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆட்சிக்கெதிராக எழுந்துள்ள கடும் எதிர்ப்பு காரணமாக, தியாப் அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.

[su_image_carousel source=”media: 16616,16615″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

இதன் உச்சகட்டமாக ஆகஸ்ட் 10ந் தேதி அந்நாட்டு பிரதமர் ஹாசன் தியாப், தமது அரசு பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஹாசன் தியாப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக லெபனானில் அடுத்த அரசமைப்பது குறித்த ஏற்பாடுகள் நடந்து முடியும்வரை, தான் பதவியில் தொடரவுள்ளதாக தியாப் அறிவித்திருந்தார். ஆனால், அவரின் அமைச்சரவைக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: வெடித்து சிதறிய 2750 டன் அம்மோனியம் நைட்ரேட்… உருக்குலைந்த லெபனான் சோகம்