தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை தேர்வாணைய இணையதளம் http://www.tnresults.nic.in/ , http://www.dge2.tn.nic.in/ , மற்றும் பள்ளிகள் மூலமாகவும் தெரிந்து கொண்டனர். மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்களில் குறைகள் இருப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் இ-பாஸ்க்கு லஞ்சம் வாங்கும் அதிமுக அரசு: உயர்நீதிமன்றம்