கலாச்சாரம் சினிமா பெண்கள்

முதன் முதலாக இந்தியாவில் பெண் மீது பெண் நேரடி #meTOO புகார்

தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் உள்ளிட்ட பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளவர் மாயா கிருஷ்ணன். தற்போது இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை மாயா கிருஷ்ணன் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக நாடக நடிகை அனன்யா ராமபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். அண்மைக்காலமாக #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியாவிலும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து சமூகவலைதளங்களில் தெரிவித்துவருகிறார்கள். இதில் குற்றம் சாட்டப்படுவது ஆண்கள்தான். ஆனால் முதன் முதலாக இந்தியாவில் பெண் மீது பெண் மீடூ புகார் தெரிவித்திருக்கிறார்.இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது .

நடிகை அனன்யா ராமபிரசாத் கூறிய விவரம் வருமாறு “கடந்த 2016ம் வருடம் எனக்கு 18 வயது இருக்கும்போது, மாயா அறிமுகமானார். இதன்பின்னர் அவர் மெல்ல மெல்ல என்னிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

நான் எனது கலைத்துறையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் வழிகாட்டினார். அதனால் அவரிடம் நான் மிக மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பழகினேன். ஆனால் அவர் என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவன் என்னை தன்வசப்படுத்தினார். என் பள்ளி நண்பர்களை என்னிடமிருந்து பிரித்தார். என்னைப் பற்றி தன் நண்பர்களிடம் தவறாக கூறி தன்னை தனிமைப்படுத்தினார்.

இதனால் நான் மனரீதியாக பலவீனமானேன். இதைப் பயன்படுத்தி, என்னுடன் இரவில் தங்கும்போது தவறாக நடந்துகொண்டார். அவரது பாலியல் தொல்லைகளை அனுபவித்த நாட்கள் என் வாழ்வில் கொடுமையான நாட்கள். அந்தத் துயரமான நினைவுகளிலிருந்து நான் இன்னும் மீளமுடியமல் தவிக்கிறேன்” என்று முகநூல் பக்கத்தில் நடிகை அன்ன்யா தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவின் முழு விவரம் அறிய

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

2 Replies to “முதன் முதலாக இந்தியாவில் பெண் மீது பெண் நேரடி #meTOO புகார்

  1. Pingback: viagratitan.com

Leave a Reply

Your email address will not be published.