மத்திய அரசால் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் ‘வேதிக் பெயின்ட்’ விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார்.

மாட்டுச் சாணத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாட்டுச் சாணத்தில் இருந்து எரிவாயு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாட்டுச் சாணத்தை பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக் கோமியம் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இப்படி பல வகையான நன்மைகளை கொண்டிருப்பதாக கூறி, அதனை சந்தைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில் மாட்டுச் சாணத்தில் தயாரான பெயிண்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேதிக் பெயின்ட் உதவும் என கட்கரி கூறியிருக்கிறார்.

சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்ட மாட்டுச் சாணத்தில் இருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, இந்த பெயின்டால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 55,000 ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

டிஸ்டம்பர், எமல்சன் ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியாக உள்ள இந்த பெயின்ட், சுவற்றில் அடித்தபின் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

சமையல் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய தடை- உயர்நீதிமன்றம்