ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களின் வசதிக்காக, 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில் 11ஆம் தேதி 2,226 பேருந்துகளும், 12ஆம் தேதி 4,000 பேருந்துகளும், 13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்காக 17 ஆம் தேதி முதல் 19
ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 50 பேருந்துகளுடன், 3 ஆயிரத்து 393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரத்து 727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15 ஆயிரத்து 270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளின் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையமும் என 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளம் மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் நோய் தொற்று காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் செல்லும் பேருந்து நிலைய விவரங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்): திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

மாதவரம் புதிய பேருந்துநிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம்: ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக மாநகர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும், கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஜனவரி 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி எதிரொலி: போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்திவைப்பு