பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்துக்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் கடந்த 4-7-2021 அன்று 92 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்தவர்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் 11வது காலாட்படை பட்டாலியனின் கூட்டு பணிக்குழுவினர் ஆவர். பணிகளுக்காக சுலுவுக்கு ராணுவ விமானத்தில் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா் என முதல் கட்ட தகவல் வெளியானது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட வீரா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த விபத்தில் இதுவரை மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறியுள்ளார்.

[su_image_carousel source=”media: 24916,24917″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் விபத்து குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு