பிரான்ஸ் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாட்டில் 15வது வாரமாக மஞ்சள் ஆடை போராட்டத்தில் ஈடுபடுத்தனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 46,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் மக்கள் போராட்டத்தை கலைக்க அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை போராட்டக்காரர்கள் மீது வீசினர்.
 
இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடைகளை உடைத்து, பேருந்துகளை எரித்தனர். இதனால் பிரான்சின் தலைநகர் பாரிஸில் கலவரம் வெடித்தது.
 
இந்த நிலையில்போராட்டம் நடத்தியவர்களில் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் போராட்டம் மேலும தீவிரப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது ..