பழைய பேருந்துகளை பெண்களுக்கான ஸ்மார்ட் கழிப்பிடமாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு துவக்கியுள்ளது. கர்நாடக அரசின் ‘ஸ்த்ரீ டாய்லெட்’ ஸ்மார்ட் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக மாநில போக்குவரத்தில் இயங்கப்படாமல் உள்ள பழைய பேருந்துகளை பெண்களின் மொபைல் கழிவறையாக மாநில அரசு மாற்றி வருகிறது.

இதற்காக ஒரு பேருந்துக்கு முறையே தலா 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி மாற்றப்படும் பேருந்துகளுக்குள் மூன்று இந்திய முறை கழிவறைகள், இரண்டு வெஸ்டன் கழிவறைகள் உள்ளன.

[su_image_carousel source=”media: 17134,17135″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

மேலும், தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய அறையும், சானிட்டரி நாப்கின் வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த ‘ஸ்த்ரீ டாய்லெட்’ பேருந்துகள் முழுவதும் சோலார் மூலம் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் முதல் பேருந்தை மாநில துணை முதல்வர் லக்ஷ்மன் சவாடி கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) திறந்து வைத்தார். இந்த ‘ஸ்த்ரீ டாய்லெட்’ பேருந்து மெஜஸ்டிக் மத்திய பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2016ல் பூனாவில் 3 பேருந்துகள் மொபைல் கழிவறையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: உலகில் ஒரு நாள் பாதிப்பில் முதலிடம் பிடித்த இந்தியா; 77,266 பேருக்கு கொரோனா உறுதி