அய்யப்பனை தரிசிக்கும் ஆவலில் 36 வயது  இளம் பெண் தனது தலைமுடிக்கு வெள்ளை நிற டை அடித்து சபரிமலையில் ஐயப்பனை செவ்வாய்கிழமை தரிசித்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.
 
எதிர்க்க எதிர்க்க அதை நடைமுறை படுத்தி பார்ப்பது இளம் தலைமுறைக்கு வாடிக்கை .. அது போல பிற்போக்கு ஹிந்துத்வா ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட குழுக்கள் தடைகளை தர தர ., இது வரை பத்துக்கும் மேற்ப்பட்ட இளம் பெண்கள் தரிசித்த விட்டதாக போலிஸ் தரப்பில் வீடியே ஆதாரம் வைத்துள்ல நிலையில்..
 
இதுகுறித்து மஞ்சு என்றஇளம் ஹிந்து  பெண் கூறுகையில், ஜனவரி 8-ஆம் தேதி நான் சபரிமலை சென்று தரிசித்தேன். எனக்கு அப்போது எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
 
மேலும் அங்கு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக இருந்தேன். நான் 50 வயதுக்கும் குறைவான பெண் என்பதால் தரிசனம் தொடர்பாக ஐயப்ப சேவா சங்கத்திடமும் உதவி கேட்டேன் என்றார்.
 
இதை உறுதிபடுத்தும் விதமாக சமூக வலைதளமான ஃபேஸ்புக் பக்கத்தில் சபரிமலையில் மஞ்சு இருப்பது போன்ற ஏராளமான புகைப்படங்கள் மற்றும் விடியோப் பதிவுகள் வைரலாகப் பரவின.
 
முன்னதாக, அக்டோபர் மாதமே சபரிமலை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என மஞ்சு முயற்சித்துள்ளார்.
 
இருப்பினும் அப்போது பெய்த கனமழையை காரணம் காட்டி போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
 
அய்யப்பனை தரிசிக்கும் ஆவலில் , பக்தி காரணமாக வெள்ளை நிற டை அடித்து சென்ற அவருக்கு பல இடங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன