நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள தனது முதல் தமிழ் ஆந்தாலஜி படமான ‘பாவகதைகள்’ டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்குரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவகதைகள்’.

அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் டிசம்பர் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

பாவகதைகள் படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான ‘பாவகதைகள்’ டீஸரை இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி