உலக அளவில் சிறந்த நடிகராக திகழ்ந்த இர்ஃபான் கானின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினர் உட்பட அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்திருக்கிறது.

1988ம் ஆண்டு சின்னத்திரையில் இருந்து, திரை துறைக்கு வந்த இர்ஃபான், நடித்த முதல் இந்தி படமான சலாம் பாம்பே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நடிகர் இர்ஃபான் கான். ஜுராசிக் வேர்ல்ட் தி ஜங்கிள் புக், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்து நடித்து உலகப் புகழ் பெற்றவர். யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இர்ஃபான் கான். 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்த இர்ஃபானுக்கு கடந்த 2011ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இருந்து பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அழகு மற்றும் சிக்ஸ் பேக் பாடியை நம்பி இருக்கும் பல பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்புத் திறனை மட்டுமே நம்பி வெற்றி கண்டவர் இர்ஃபான் கான்.

53 வயதான இர்ஃபான் கான் நியூரோ எண்டாக்ரின் டியூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருடங்களாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க: துல்கர் சல்மான் படக் காட்சிகளை நீக்க கோரும் தொல். திருமாவளவன்

இர்ஃபான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல ஹாஷ்டேக்குகளை டிரெண்டாக்கி, இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் இர்ஃபான் கான் மறைந்த செய்தி வதந்தியாக இருக்கக் கூடாதா என்று பிரபலங்களும், ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.