தமிழ் சினிமாவில் முதல் முறையாக மாரி 2 படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி” பாடல் தற்போது வரை 12.6 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதுவரை எந்த தமிழ்த் திரைப்பட பாடல் வீடியோவும் செய்யாத சாதனையை ரவுடி பேபி பாடல் செய்து வருகிறது. இப்பாடல் யுடியூபில் வெளியான நாளிலிருந்தே சாதனைகளைப் படைத்து வருகிறது.

தற்போது 12 கோடியே 68 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மொழி தெரியாத அனைத்துவித ரசிகர்களையும் கவர்ந்து, தினமும் இப்பாடலுக்கு சில லட்சம் பார்வையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.

இந்திய அளவில் மிகக் குறுகிய நாட்களில் 12 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இரண்டாவது பாடல், தென்னிந்திய அளவில் குறுகிய நாட்களில் 12 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற முதல் பாடல், மேலும், தமிழ் சினிமாவில் 12 கோடிக்கு மேல் பார்வைகளையும், 10 லட்சம் லைக்குகளையும் கடந்த முதல் தமிழ்ப் பாடல் போன்ற சாதனைகளை ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது.