கட்சிகள் சமூகம் தமிழ்நாடு பாஜக பெண்கள்

திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது

திருப்பூரில் 12 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மணியக்காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பழகி வந்துள்ளார். கொரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால்,

இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்த சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ராஜ்ஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றம் அல்ல.. மீண்டும் சர்ச்சையில் மும்பை நீதிமன்றம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.