9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31 ஆம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (செப்டம்பர் 06) ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா, திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம்:

பொதுப்பிரிவு – நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர்

பொது (பெண்கள்) – தென்காசி, ராணிபேட்டை

எஸ்.சி (பெண்கள் ) – செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[su_image_carousel source=”media: 26281,26280″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாத கால அவகாசம் தேவை; உச்சநீதிமன்றத்தில் மனு