தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தற்போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 87 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பணியாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. எனவே தற்போது ஆளுநர் சிகிச்சைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: தோண்ட தோண்ட சொத்துக்கள்… பதற்றத்தில் மாரிதாஸ்…