ஆன்மிகம் சட்டம் பெண்கள்

டிமிக்கி கொடுத்த ரேபிஸ்ட் சாமியார் வீரேந்தர் தேவ் தீட்சித்தை பிடிக்க ரூ.5 லட்சம் பரிசு

தலைமறைவான சாமியார் வீரேந்தர் தேவ் தீட்சித்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
 
டெல்லியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் வீரேந்தர் தேவ் தீட்சித். இந்த ஆசிரமத்தில் பெண்களும், சிறுமிகளும் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், அதை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு ஒரு குழு அமைத்தது. 
 
அதன் விசாரணையில், பெண் சீடர்களை தீட்சித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வந்தது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி, இதை சி.பி.ஐ. விசாரித்தது.
 
அதற்குள் தீட்சித் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் நோட்டீஸ் விடப்பட்டும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இந்நிலையில், தீட்சித்தை கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.