மருந்து விலை கட்டுப்பாட்டுச் சட்டம் 2013-ன் படி, ஆண்டுக்கு ஒருமுறை அத்யாவசிய மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மருந்து உற்பத்தியாளர்கள் மாற்றி அமைத்துக்கொள்ளமுடியும்.
 
மருந்துகளின் மொத்த விற்பனை அடிப்படையில், மருந்துகளின் விலையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். இதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.
 
அந்த வகையில், 2019-2020-ம் நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
அத்தியாவசிய மருந்துகளுக்கு 4 சதவிகிதமும், இதய ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளுக்கான விலை 4.26 சதவிகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கும் பகுதியில் பொருத்தப்படும் மருந்து சேர்க்கப்பட்ட ஸ்டென்டின் விலை 30,080 ரூபாயும், மருந்து சேர்க்கப்படாத உலோக ஸ்டென்ட்டின் விலை 8,261 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர, 871-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துகள், ஸ்டென்ட்டுக்கான புதிய விலை, ஏப்ரல் 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது.