இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரை செய்துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்குகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஃபைசர் தாக்கல் செய்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் இன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டது.

இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது.

இந்த பரிந்துரை மீது இந்திய மருத்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் முடிவெடுத்து, இறுதி அனுமதி வழங்கியதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொது பயன்பாட்டுக்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்வது சாத்தியமாகும்.

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதி; சுகாதாரத்துறை