அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 43 நாட்களுக்கு பின் நேற்று முதல் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பொது மக்களின் எதிர்ப்புகள், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் அண்டை மாநிலங்களைவிட தமிழகம் மதுபான விற்பனையில் சாதனையும் புரிந்தது.

மேலும் வாசிக்க: ஆதார் இல்லாத ‘குடி’மகன்கள் வசதிக்காக நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுவரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

[su_carousel source=”media: 13518,13519″ limit=”100″ width=”660″ height=”360″ items=”1″ scroll=”2″ speed=”100″]

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.