பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதை தடுப்பதற்காக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நாளை புதன்கிழமை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால், பெண்கள் யாரும் செல்வதைத் தடுக்கும் வகையில் சுமார் 100 பெண்கள் முகாம் அமைத்து அங்கு தங்கி போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் அங்கு வரும் வாகனங்களை கூட சட்டதை மீறி சோதிக்கின்றனர்.

ஐயப்பனை வாழ்த்தி மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்கும் இவர்கள், 10 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் இந்த கோயிலில் நுழையக்கூடாது என்று சொல்லி, திரும்பி செல்லக் கட்டாயப்படுத்துகின்றனர். நாள் முழுவதும் இந்த போராட்டத்தை தொடரும் வகையில், ஆண்களும் பெண்களுமாக 100 பேர் கொண்ட குழுவாக ஒன்று நிலக்கல் கிராமத்தில் முகாமிட்டுளளார்கள்

இந்த கோயிலுக்கு வரும் எல்லா வாகனங்களையும் நாங்கள் சோதனை செய்வோம். 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் இருப்பதைக் கண்டால் அவர்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். பாரம்பரியம் அப்படியே பின்பற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். பெண்கள் இந்த கோயிலுக்கு வர விரும்பினால், 50 வயது ஆகும் வரை காத்திருக்கட்டும்” என்று போராட்டக்காரர்களில் ஒருவரான லலிதாம்மா தெரிவித்தார்.

இது வரை விநாயகரை வழிபட பிராதான கோயிலில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பம்பா வரை பெண் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால், இந்திய உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னர் பம்பா வரையில் பெண்கள் செல்வதைக்கூட இந்த போராட்டக்காரர்கள் சட்ட விரோதமாக தடுத்து வருகின்றனர்.

பக்தர்கள் நிரம்பிய அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும், தனியார் வாகனங்களையும் பெண் பேராட்டக்காரர்கள் நிறுத்தி சோதனையிட்டனர்.இரண்டு இளம் பெண்கள், ஒரு ஆண் மற்றும் வயதான பெண் ஒருவர் ஆகியோரை ஏற்றிவந்த வாடகைக்கார் இந்த போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டது. அவர்கள் ஊரைவிட்டு திரும்பிப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள் இதனால் கலக்கம் அடைந்து உள்ளனர் . பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினரை கைது செய்து பாதுகாப்பு தந்தால் நாங்களும் சுவாமி ஐய்யப்பனை தரிசனம் செய்து மகிழ்வோம் என்று பல பெண்கள் கூறி வரும் நிலையில் கேரளா அரசு இந்த பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினரை கைது செய்து அப்புறபடுத்துமா என்ற எதிர்பார்ப்பு பெண் பக்தர்களிடம் எற்பட்டு உள்ளது ..