முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மூன்று இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கி வரும் நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே உள்ள உறவு, ஜெயில், மன்னார்குடி கேங்ஸ் ஆகியவை இந்த படத்தில் இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளளார் ராம்கோபால் வர்மா.

சசிகலா,” என்ற தலைப்பில், அரசியலில் அன்பு ஆபத்தானது என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா மற்றும் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க நடிகைகளை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.