‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் பாக்ஸிங் ரிங் போன்ற கேக்கை வெட்டி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஆர்யா.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.

K9 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி உள்ளது.

இந்த திரைப்படத்திற்காக நடிகர்கள் ஆர்யா, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக நிஜ குத்துச்சண்டை வீரர்களை போல் தங்களது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். மார்ச் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஆர்யாவின் பிறந்தநாள் என்பதால் நாக்-அவுட் கபிலனின் புதிய போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பா. ரஞ்சித்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் சர்ச்சை