உலகம் கொரானா

கொரோனா தொற்றே இல்லாத நாடாக மாற்றிய பெண்மணி

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் நடவடிக்கையால் கொரோனா தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்துள்ளளது நியூஸிலாந்து என உலக நாடுகளே ஜெசிந்தாவை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றன.

நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பைப் பதிவு செய்தது. அப்போது தொடங்கி அந்நாட்டில் கொரோனா தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாகத் தீவிர ஊரடங்கை அமல்படுத்திய அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

இதன் விளைவாக நியூசிலாந்து நாட்டில் கடந்த 19 நாட்கள் நடந்த சோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த 19 நாள் முன் வரை 1,504 பேர் மட்டுமே நியூசிலாந்தில் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.

அந்நாட்டில் கடந்த 10 நாட்கள் முன்பு ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 50 வயதாகும் அந்த நபர் குணமடைந்தவுடன் கொரோனா இல்லாத நாடு என்ற அறிவிப்பை வெளியிடக் காத்திருந்த நியூசிலாந்து. இப்போது அதை நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அக்லாண்ட் மாகாணத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் 2 நாள் தனிமைப்படுத்தப்பட்டபின் இப்போது குணமடைந்துள்ளார். இதன் மூலம் எங்கள் நாடு கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது” என தெரிவித்தது.

இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நியூசிலாந்து, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முறை இனியும் தொடரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதே வேளையில் நாட்டின் எல்லைப் பகுதியில் சில தளர்வுகளை நியூசிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க: உலக சுகாதார அமைப்பை எச்சரிக்கும் பிரேசில்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply