தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஓராண்டுக்கு இவர்கள் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.