ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அப்படி நீக்காவிட்டால் குழுவின் அட்மின்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி ஓராண்டுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு அவரது ரசிகர் மன்றக் குழுவினர் ஓவ்வொரு முக்கிய நகரங்களிலும் வாட்ஸ் ஆப் குரூப் துவங்கி இயங்கி வருகின்றனர். இதில் பகிரப்படும் முக்கிய புகார்கள் ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்படி கடந்த மாதம் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து சிலரை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார். பின்னர் தனது ரசிகர்கள் ஆதரவு குறைவது தெரிந்தவுடன் மீண்டும் அவர்களை சேர்ப்பதாக மறுஅறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி மக்கள் மன்ற குரூப்பின் பெயர்களை, அவர்கள் இஷ்டம்போல மாற்றக்கூடாது .அந்தந்த மாவட்ட, ஒன்றியம் மற்றும் நகரத்தின் பெயர்களை வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வைக்கவேண்டும். அந்தந்த மாட்டத்தில் இருப்பவர்கள் அவரவர் மாவட்டத்தில் இயங்கும் வாட்ஸ் ஆப் குழுக்களில் மட்டுமே சேரவேண்டும்’’ என்று ரஜினி தரப்பிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை மன்ற குரூப் அட்மின்களுக்கு தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்து ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில், ரஜினியிடம் கேட்டால் கட்சி எல்லாம் இப்போ நமக்கெதற்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று கூறி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் போட்டியிட ரஜினிக்கு விருப்பம் இல்லை. அதனால் கட்சி துவங்கும் பணியை ஒத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து பலரும் விமர்சித்துவருகின்றனர்.