ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி கிறிஸ்துவ வழக்கப்படியும், டிசம்பர் 2-ம் தேதி இந்து வழக்கப்படியும் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் முதல் முறையாக அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்வதேச படங்ஙளில் நடத்து புகழ்பெற்ற பிரியங்காவிற்கு திரையுலக பிரபரங்களும் பிற துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் வந்து தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிரியங்காவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கலந்து கொண்டிருக்கிறார். பிரியங்கா மற்றும் ஜோனஸ் ஜோடியை வாழ்த்திய மோடி அவர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடி பிரியங்கா, ஜோனஸ் ஆகியோருடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா மக்களை சந்தித்து ஆறுதல் கூற நேரமில்லாத பிரதமர் மோடி, நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று சமூக வளைத்தலங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.