தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றது தமிழ் ராக்கர்ஸ். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் லோகோவில் உள்ள வடிவமைப்பு போன்றே, நடிகர் விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமேடை பின்புற அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலக தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விஷால் இருந்து வருகின்றார். அதோடு திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறிவருகிறார்.

மேலும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை மூடக்குவதே தனது லட்சியம் என்று கூறி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அது நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்ராக்கர்ஸை ஒழிக்க நினைக்கும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் பெயரில் இருக்கும் டுவிட்டர் கணக்கில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் லோகோ வடிவமைப்பு போன்றே, விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமேடை பின்புற அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து
சமூக வலைதளங்களில் பலர் கேலி வருகின்றனர்.