ஊரடங்கு தடையை மீறி கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு சென்று மீன்பிடித்த நடிகர்கள் விமல் மற்றும் சூரிக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் உட்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சுற்றுலாத் தளங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தடையை மீறி கொடைக்கானலுக்கு சென்ற அவர்கள், தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்துள்ளனர். அவர்கள் மீன் பிடித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பேரிஜம் பகுதியில் மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்ததையும் மாவட்ட வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி வாக்கிங் செல்ல இ-பாஸ் பெற்றாரா ரஜினிகாந்த்…