உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முன்னாள் முதலமைச்சரை  ஆதரித்து பேசியதாக ஊனமுற்ற வாலிபர் ஒருவரை பாரதீய ஜனதா கட்சி தலைவர் தாக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரபிரதேசம் சம்பால் மாவட்டம் சந்துசி தெஹில் பகுதியில் உள்ள குர்ஜா கேட் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குஜார் ஊனமுற்றவர் ஆவார்.
 
இவரை பாரதீயஜனதா கட்சி தலைவர் முகமது மியான் என்பவர் தாக்கி உள்ளார். நீ அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்தவன் என கூறி தடியால் தாக்கி உள்ளார்.
 
குஜார் அகிலேஷ் யாதவை ஆதரித்து பேசியதால் மியான் தனது வாகனத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து இளைஞரைத் தாக்கி உள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அஸ்மோலி காவல் நிலையம் மியானுக்கு ஒரு பிரபலமான வரலாற்று புகலிடமாக உள்ளது. மேலும் குற்றவியல் முன்னோடியாக உள்ளார் என சாம்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறி உள்ளார்.
 
மேலும் இந்த சம்பவத்தில் குஜார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் உடனே விடுதலை செய்யப்பட்டார்.
 
குஜார் மூத்த பிஜேபி தலைவர்களுக்கு எதிராக ஆபாசமாக பேசினார். இதை கேட்டபிறகு எனது கட்டுப்பாடை இழந்து அவரை தாக்கி விட்டேன் இதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன் என பாஜக தலைவர் மியான் கதை அடித்தாலும் விடியோ அனைத்து உண்மைகளையும் பேசி உடைத்து விட்டது