கேளிக்கை சினிமா

இயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்களை பெற்ற இரு படங்கள்

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் வெளியான 2 புதிய படங்களை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒன்று திரிஷா-விஜய் சேதுபதி நடித்த 96, மற்றொரு படம் விஷ்ணுவின் ராட்சசன்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்விருபடத்திற்க்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின் அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கே உரியதாகும்” என பதிவிட்டுள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

4 Replies to “இயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்களை பெற்ற இரு படங்கள்

 1. Pretty section of content. I just stumbled upon your blog and in accession capital to assert that I get actually enjoyed account your blog
  posts. Anyway I’ll be subscribing to your feeds and even I
  achievement you access consistently rapidly.

 2. you’re in point of fact a good webmaster.

  The site loading pace is amazing. It sort of feels that you are doing
  any distinctive trick. Moreover, The contents are masterpiece.
  you have done a great job in this topic!

 3. Hi there! Would you mind if I share your blog with my facebook
  group? There’s a lot of people that I think would really enjoy
  your content. Please let me know. Many thanks

 4. Greetings from Ohio! I’m bored to tears at work so I decided to browse your website on my iphone during lunch break.
  I love the knowledge you provide here and can’t wait to take
  a look when I get home. I’m surprised at how quick your blog loaded on my cell
  phone .. I’m not even using WIFI, just 3G .. Anyways, wonderful blog!

Leave a Reply

Your email address will not be published.